விடுதியில் ரகசிய கேமரா வைத்த வழக்கு.. இருவர் மீது பாய்ந்த குண்டாஸ்..
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே மகளிர் விடுதியில் ரகசிய கேமரா வைத்த பெண் மற்றும் அவரது காதலன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
ராயக்கோட்டை பகுதியில் உள்ள டாடா நிறுவனத்தின் மகளிர் விடுதியில் தங்கியிருந்த ஒடிசா மாநில பெண் நீலு குமாரி குப்தா, குளியலறையில் ரகசிய கேமரா வைத்தார். அந்த வீடியோக்களை தனது காதலன் ரவி பிரதாப் சிங்கிற்கு அனுப்பினார். இந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இருவரும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இருவரும் தற்போது குண்டாஸில் கைது செய்யப்பட்டுள்ளனர்
Next Story
