"கண்களை இமைக்க மறந்த தருணம்"- நடுக்கடலில் அசத்தல் சாகசம் -வியந்து பார்த்த பொதுமக்கள்

x

48வது இந்திய கடலோர காவல்படை எழுச்சி தினத்தை முன்னிட்டு, கடலோர காவல்படையின் பணிகளை மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில், செய்முறை விளக்க சாகச நிகழ்ச்சி சென்னை துறைமுகம் அருகே நடைபெற்றது. இதில், நடுக்கடலில் கப்பல் தீப்பிடித்தால் அதில் உள்ளவர்களை மீட்பது, நடுக்கடலில் தத்தளிக்கும் மீனவர்களை காப்பாற்றுவது, துப்பாக்கி சூட்டின் மூலம் எதிர் தாக்குதல் நடத்துதல் உள்ளிட்ட சாகசங்கள் செய்து காட்டப்பட்டன. இந்த நிகழ்ச்சியினை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர். நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களை சந்தித்த, இந்திய கடலோர காவல்படையின் கிழக்கு பிராந்திய ஐஜி, ஆண்டுக்கு 200-க்கும் மேற்பட்டோரின் உயிரை கடலோர காவல்படை காப்பாற்றி வருகிறது என்றார். அதேபோல் நிகழ்ச்சியை கண்ட பொதுமக்களும், சாகச நிகழ்ச்சிகள் குறித்து மகிழ்ச்சி தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்