ஸ்காட்லாந்து கப்பலில் தவிக்கும் தமிழர்கள் - உடனடியாக மீட்க தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை

ஸ்காட்லாந்து, லண்டன் இடையே சுற்றுலா பயணிகளை அழைத்து செல்லும் சொகுசு கப்பல் சேவையை ஓல்சன் நிறுவனம் நடத்தி வருகிறது.
ஸ்காட்லாந்து கப்பலில் தவிக்கும் தமிழர்கள் - உடனடியாக மீட்க தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை
Published on
ஸ்காட்லாந்து, லண்டன் இடையே சுற்றுலா பயணிகளை அழைத்து செல்லும் சொகுசு கப்பல் சேவையை ஓல்சன் நிறுவனம் நடத்தி வருகிறது. இந்த நிறுவனத்திற்கு சொந்தமான பால்மோரல் என்ற சொகுசுக் கப்பல் கடந்த மார்ச் மாதம் லண்டனில் இருந்து சுற்றுலா பயணிகளை ஏற்றிக் கொண்டு ஸ்காட்லாந்துக்கு சென்று திரும்பும் போது, கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக கப்பல் ஸ்காட்லாந்து நாட்டு கடல் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழர்கள் 5 பேர் உள்ளிட்ட இந்தியாவை சேர்ந்த 48 ஊழியர்களை ​இதுவரை மீட்கப்படவில்லை என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஸ்காட்லாந்தில் கப்பலில் தவித்துக் கொண்டிருக்கும் தமிழர்கள் உள்ளிட்ட 48 இந்தியர்களையும் மீட்டு அழைத்து வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com