ஸ்கூட்டியை இடித்து பல கி.மீ-க்கு இழுத்து சென்ற சொகுசு கார் - அதிர்ச்சி வீடியோ
உத்தரப்பிரதேசத்தில், ஸ்கூட்டியின் மீது இடித்து விபத்தை ஏற்படுத்திய சொகுசு வாகனம், பல கிலோமீட்டர் தூரத்திற்கு இருசக்கர வாகனத்தை இழுத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. லக்னோவில் பிரிஜேஷ் சிங் என்பவர் தனது சொகுசு வாகனத்தை இரவில் வேகமாக ஓட்டிச் சென்றார். அப்போது அண்ணன் தங்கை இருவர் சென்ற ஸ்கூட்டி வாகனம் மீது கார் மோதியதில் இருவரும் கீழே விழுந்தனர். இதனையடுத்து, காருக்கு அடியில் சிக்கிய ஸ்கூட்டி, பல கிலோமீட்டர் தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டது.
Next Story
