ஜூன் 3-ல் பள்ளிகள் திறப்பு - அரசு உத்தரவு

ஜுன் 3ம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜூன் 3-ல் பள்ளிகள் திறப்பு - அரசு உத்தரவு
Published on
ஜுன் 3ம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படுவது ஜூன் 7ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வரும் நிலையில், பள்ளிக் கல்வித்துறை இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், 2019 - 20 ஆம் கல்வியாண்டில், மாணவர்களுக்கான பாடத் திட்டங்கள் முழுமையான அளவில் முடிக்கப்பட உள்ளதால், ஜூன் 3 ஆம் தேதியன்று, அனைத்து பள்ளிகளும் திறக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com