அடுத்த வாரம் திறக்கப்படும் பள்ளிகள் - தமிழ்நாடு அரசின் சிறப்பு ஏற்பாடு
கோடை விடுமுறை முடிந்து, ஜூன் 2-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பொதுமக்கள் பயணம் செய்ய ஏதுவாக 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.இதற்காக வரும் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருச்சி, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட இடங்களுக்கு ஆயிரத்து 175 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இதேபோல், வரும் 30 மற்றும் 31 ஆகிய இரு நாட்களிலும், சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 190 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
சென்னை மாதவரத்தில் இருந்தும் 48 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இதேபோல், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய நகரங்களில் இருந்து பிற நகரங்களுக்குச் செல்ல 250 பேருந்துகளும், வரும் 1-ஆம் தேதி, சொந்த ஊர்களில் இருந்து பொதுமக்கள் சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு செல்வதற்கு வசதியாக 850 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிட்ட்டப்படுள்ளதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
