பி.ளே.டா.ல் கிழித்து டார்ச்சர்.. கொடூரர்களிடம் சிக்கிய பள்ளி மாணவி.. திட்டக்குடி அருகே அதிர்ச்சி..

திட்டக்குடி, கடலூர் 10ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற மர்ம நபர்கள்

திட்டக்குடி அருகே பள்ளிக்கு சென்ற பத்தாம் வகுப்பு மாணவியை மர்ம நபர்கள் பலாத்காரத்தில் ஈடுபட முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே அருகேரி கிராமத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி சம்பவத்தன்று பள்ளிக்கு சென்றபோது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் மாணவியின் கையை பிளேடால் கிழித்து, பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர்.

சிறுமி பலமாக கூச்சலிட்டதால் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஆவினங்குடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com