இன்ஸ்டாகிராம் மோகத்தால் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை
குமரி மாவட்டம் பளுகல் அருகே பெற்றோர் கண்டித்ததால் 11ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பளுகல் பகுதியை சேர்ந்த ஹரிகுமார் என்பவரின் இரண்டாவது மகள் ஹிமாலட்சுமி அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் ஹிமாலட்சுமி படிக்காமல் முழு நேரமும் இன்ஸ்டாகிராம் பார்த்துகொண்டே இருந்ததை அவரது தாயார் கண்டித்து உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஹிமாலெட்சுமி தாயிடம் வாக்குவாதம் செய்துவிட்டு தனது அறைக்கு சென்று கதவை அடைத்துள்ளார். வெகு நேரமாகியும் ஹிமாலட்சுமி வெளியே வராததால் சந்தேகம் அடைந்த தாயார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ஹிமாலட்சுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்
Next Story

