பேருந்து படிக்கட்டில் பயணம் - கீழே விழுந்து பள்ளி சிறுவன் படுகாயம்
பேருந்து படிக்கட்டில் பயணம் - கீழே விழுந்து பள்ளி சிறுவன் படுகாயம்
பேருந்து படிக்கட்டில் பயணம் - கீழே விழுந்து பள்ளி சிறுவன் படுகாயம்
கரூர் மாவட்டம் குளித்தலையில் தனியார் பேருந்தில் படியில் நின்று பயணம் செய்த பள்ளி சிறுவன், பேருந்து வளைவில் திரும்பியபோது தடுமாறி கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காயமடைந்த சிறுவன் 108 ஆம்புலன்ஸ் மூலம் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தகவலறிந்த குளித்தலை போலீசார் தனியார் பேருந்தை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேருந்து அதிவேகமாக சென்றதாக ஒரு தரப்பும், நடத்துனர் எச்சரித்தும் மாணவர்கள் படியில் நின்றதாக ஓட்டுநர் தரப்பும் தெரிவித்துள்ளது.
சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், பள்ளி மாணவர்களுக்காக கூடுதல் அரசு பேருந்துகள் இயக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
#schoolboy #bus #thanthitv