பெற்றோர்கள், சமூக ஆர்வலர்களின் கோபத்தை தூண்டிய பள்ளி வாகன சோதனை
திருச்சி மாவட்டம், நம்பர் ஒன் டோல்கேட் அருகே உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் மாவட்ட போக்குவரத்து சார்பில் பள்ளி வாகனங்கள் கூட்டாய்வு நடைபெற்றது. இந்த ஆய்வு பணியை திருச்சி மாவட்ட ஆட்சியர், பிரதீப் குமார் தொடங்கி வைத்துவிட்டு சென்றுள்ளார். மாவட்ட ஆட்சியர் சென்ற அடுத்த நொடியே ஆய்விற்காக மைதானத்தில் நிறுத்தப்பட்டிருந்த 700க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்களை போக்குவரத்து ஆய்வாளர்கள் அவசர அவசரமாக ஆய்வு செய்து அனுப்பினர். இச்சம்பவம் சமூக ஆர்வலர்கள், பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
