கண்மாய்-க்குள் பள்ளி குழந்தைகளுடன் கவிழ்ந்த ஸ்கூல் வேன் - மாணவர்கள் நிலை..?

x

கோவில்பட்டியில் கண்மாயில் வேன் கவிழ்ந்த விபத்தில் டிரைவர் உட்பட 6 குழந்தைகளுக்கு சிறிய காயம் ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் பல்லாக்கு ரோட்டில் அமைந்துள்ள தனியார் பள்ளி வேன் ஒன்று பள்ளி மாணவர்களை ஏற்றி கண்மாய் கரை வழியாக சென்றுள்ளது. ஒருவழிப்பாதை என்பதால், எதிரே வந்த டிராக்டர் செல்ல வழிவிட்டு கண்மாய் கரை ஓரம் வேனை டிரைவர் நிறுத்தியுள்ளார். அப்போது கண்மாய் கரை சரிந்ததில் வேன் கவிழ்ந்து கண்மாய்க்குள் விழுந்தது. இதில் டிரைவர் உட்பட 6 குழந்தைகளுக்கு சிறிய காயம் ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்