School Van Accident | பள்ளி குழந்தைகளோடு கவிழ்ந்த பள்ளி வேன் - மாணவர்கள் நிலை..?
ஈரோடு சென்னிமலை அருகே பள்ளி வேன் கிளட்ச் பெடலில் வாட்டர் பாட்டில் சிக்கியதால், வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அம்மாபாளையம் பகுதியில், 16 மாணவர்கள் மற்றும் 3 ஆசிரியர்களுடன் பள்ளி வேன் சென்றது. அப்போது கிளட்ச் பெடலில் வாட்டர் பாட்டில் சிக்கியதால் வேன் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில், பள்ளி மாணவர்களுக்கு சிறு காயங்கள் ஏற்பட்ட நிலையில், சென்னிமலை போலீசார் கிரேன் மூலம் வேனை அப்புறப்படுத்தினர்.
Next Story
