தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து : உதவியாளர் பலி

நாமக்கல் ராசிபுரம் அருகே தனியார் பள்ளிக்கு சொந்தமான வேன் கவிழ்ந்து விபத்தில் வேன் உதவியாளர் உயிரிழந்தார். வேனில் இருந்த 15 குழந்தைகள் காயமடைந்தனர்.
தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து : உதவியாளர் பலி
Published on

நாமக்கல் ராசிபுரம் அருகே தனியார் பள்ளிக்கு சொந்தமான வேன் கவிழ்ந்து விபத்தில் வேன் உதவியாளர் உயிரிழந்தார். வேனில் இருந்த 15 குழந்தைகள் காயமடைந்தனர். இன்று காலை சேந்தமங்கலம் பகுதியிலிருந்து, 40க்கும் மேற்பட்ட குழந்தைகளுடன் ராசிபுரம் நோக்கி அந்த வேன் வந்தது. வெள்ளக்கணவாய் பகுதி அருகே வேன் வந்தபோது, ஓட்டுனரின் கட்டுபாட்டை இழந்து வளைவில் கவிழ்ந்தது. ஓட்டுநர் செல்போனில் பேசியபடி, ஓட்டியதால் விபத்து ஏற்பட்டதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com