School | TN Police | பள்ளி 3வது மாடியில் இருந்து விழுந்து 9ம் வகுப்பு மாணவி படுகாயம்
School | TN Police | பள்ளி 3வது மாடியில் இருந்து விழுந்து 9ம் வகுப்பு மாணவி படுகாயம் #Dindigul #Natham #School #TNPolice திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 9-ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவி , பள்ளிக் கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தார். மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு இந்தச் சம்பவம் நடந்துள்ளது. கழுத்து மற்றும் இடுப்புப் பகுதியில் பலத்த காயமடைந்த மாணவியை ஆசிரியர்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். மாணவி தானாகக் குதித்தாரா, தவறி விழுந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணங்களில் பள்ளி நிர்வாகமும் நத்தம் போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி நேரத்தில் நடந்த இந்தச் சம்பவம் மாணவிகள் மற்றும் பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
