23 ஆயிரம் மாணவர்களுக்கு போக்குவரத்து வசதி : இடைநிற்றலை தவிர்க்க தமிழக அரசு முடிவு

பள்ளி மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்க, 23 ஆயிரம் மாணவர்களுக்கு போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு வசதிகள் செய்து தர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
23 ஆயிரம் மாணவர்களுக்கு போக்குவரத்து வசதி : இடைநிற்றலை தவிர்க்க தமிழக அரசு முடிவு
Published on
தமிழகத்தில் உள்ள மலைப்பகுதிகள் மற்றும் ஊரகப்பகுதிகளில் வசிக்கும் மாணவர்கள், தொலைதூரத்தில் இருக்கும் பள்ளிகளுக்கு தொடர்ந்து செல்ல முடியாத காரணத்தால் தங்கள் படிப்பை பாதியில் நிறுத்தும் சூழல் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதனை தவிர்க்கும் விதமாக, மாணவர்களுக்கு போக்குவரத்து வசதியினை தமிழக அரசு ஏற்படுத்தி வருகிறது. அதன்படி வரும் கல்வியாண்டில், ஆயிரத்து 69 தொலைதூர வாழ்விடங்கள் மற்றும் 124 ஊரகப்பகுதிகளில், மொத்தம் 23 ஆயிரத்து 137 மாணவர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு போக்குவரத்து வசதி மற்றும் மெய்க்காவலர்களின் பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தி தர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com