`மிட்டாய்' என நினைத்து `குட்கா'வை சாப்பிட்ட பள்ளி மாணவர்கள் - கோவையில் அதிர்ச்சி
புத்தகப்பையில் குட்கா - மளிகை கடையில் 141 கிலோ குட்கா பறிமுதல்
கோவை மாவட்டம் எலச்சிபாளையம் அரசு பள்ளி மாணவர்களின் புத்தகப்பையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கண்டறியப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆறாம் வகுப்பு மாணவர்களின் புத்தகப்பையில் இருந்து குட்கா பொருட்களை ஆசிரியர்கள் எடுத்தனர். விசாரணையில், மாணவர்கள் அதை மிட்டாய் என்று கூறி மற்றவர்களுடனும் பகிர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து அப்பகுதி மக்கள், அருகில் உள்ள மளிகை கடை மற்றும் பாழடைந்த கட்டிடத்தில் 141 கிலோ குட்கா பதுக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்து, போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார், குட்கா பொருட்களை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
