சத்தியமங்கலம் அருகே ஆசிரியரால் தாக்கப்பட்டு காயம் அடைந்த அரசுப்பள்ளி மாணவன் மருத்துவமனையில் அனுமதி

சத்தியமங்கலம் அருகே ஆசிரியரால் தாக்கப்பட்டு காயம் அடைந்த அரசுப்பள்ளி மாணவன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
சத்தியமங்கலம் அருகே ஆசிரியரால் தாக்கப்பட்டு காயம் அடைந்த அரசுப்பள்ளி மாணவன் மருத்துவமனையில் அனுமதி
Published on
சத்தியமங்கலம் அருகே ஆசிரியரால் தாக்கப்பட்டு காயம் அடைந்த அரசுப்பள்ளி மாணவன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். அண்ணாநகர் சுந்தரபுரம் பகுதியை சேர்ந்த சின்னச்சாமி என்பவரின் மகன் மதியரசு பனையம்பள்ளியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 4 ம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில் வகுப்பில் சக மாணவர்களுடன் பேசியதால் ஆசிரியர் மாணவனை அடித்ததாக கூறப்படுகிறது. இதில் மாணவனுக்கு காலில் காயம் ஏற்பட்டதால் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான். இதுதொடர்பாக ஆசிரியர் மீது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com