பள்ளிகள் திறப்பு மேலும் தள்ளிப்போகிறது? - கல்வித்துறை வட்டாரங்கள் தகவல்

மே 3ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகள் திறக்கப்படுவது ஜூன் மாத இறுதிக்கு தள்ளி வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பள்ளிகள் திறப்பு மேலும் தள்ளிப்போகிறது? - கல்வித்துறை வட்டாரங்கள் தகவல்
Published on

தமிழகத்தில் கொரோனோ பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு ஏற்கனவே நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளி வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் திறக்கப்படும் பள்ளிகள், ஜூன் மூன்றாவது வாரத்தில் திறக்கப்படலாம் என முதலில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனா தாக்கம் அதிகரிப்பால், ஜூன் இறுதி வாரத்திற்கோ, அல்லது ஜூலை முதல் வாரத்திற்கோ தள்ளி வைக்கப்படலாம் என்று கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேபோல கல்லூரிகள் திறப்பு மற்றும் மாணவர் சேர்க்கை பணிகளும், தள்ளிப் போக அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com