பள்ளிக்கு பணம் கட்டவில்லை என்பதால் தண்டனை : மனமுடைந்த மாணவி விஷம் குடித்து தற்கொலை முயற்சி

பள்ளிக்கு பணம் கட்டவில்லை என்பதற்காக ஆசிரியை முட்டி போட சொன்னதால் மனமுடைந்த மாணவி விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
பள்ளிக்கு பணம் கட்டவில்லை என்பதால் தண்டனை : மனமுடைந்த மாணவி விஷம் குடித்து தற்கொலை முயற்சி
Published on
பள்ளிக்கு பணம் கட்டவில்லை என்பதற்காக ஆசிரியை முட்டி போட சொன்னதால் மனமுடைந்த மாணவி விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். கும்பகோணம் அருகே வலங்கைமானில் இயங்கும் தனியார் பள்ளியில் கிரிஜா என்ற மாணவி 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். நன்றாக படிக்கும் மாணவி என்ற பெயர் பெற்றுள்ள கிரிஜா, பல்வேறு போட்டிகளிலும் வெற்றி பெற்றவர். விவசாய கூலித் தொழிலாளியான இவரின் தந்தை கிரிஜாவுக்கு பள்ளி கட்டணம் செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவரது ஆசிரியை வகுப்பறையில் முட்டி போட வைத்ததாக கூறப்படுகிறது. மற்ற மாணவர்கள் முன்னிலையில் நடந்த இந்த சம்பவத்தால் மனமுடைந்த கிரிஜா விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் மாணவிக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
X

Thanthi TV
www.thanthitv.com