தமிழகத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை அரசால் அமைக்கப்பட்ட கட்டண நிர்ணயக் குழு கல்வி கட்டணங்களை நிர்ணயிக்கிறது. அந்த வகையில் கடந்த ஆண்டுடன் பழைய கட்டணங்கள் முடிவுற்றதை அடுத்து, நடப்பு ஆண்டில் முதல், மூன்று கல்வி ஆண்டுகளுக்கான புதிய கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க, கட்டண உயர்வு வேண்டி 400 தனியார் கல்லூரிகள் விண்ணப்பித்துள்ளன. அவர்களுடன் விரைவில் ஆலோசனை நடத்தி வருகின்ற செப்டம்பர் 17ஆம் தேதி கலந்தாய்வு தொடங்குவதற்கு முன்பாக கட்டணம் நிர்ணயிக்கப்படும் என்று கட்டண நிர்ணயக் குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.