School College Leave | நாளை மறுநாள் ஒரு மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிப்பு
School College Leave | நாளை மறுநாள் ஒரு மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிப்பு
தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா - பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை உலகப் புகழ்பெற்ற தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-வது ஆண்டு திருவிழாவை முன்னிட்டு, திவ்ய நற்கருணை பவனி கோலாகலமாக நடைபெற்றது. மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் நடைபெற்ற இந்தப் பவனியில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். சிகர நிகழ்ச்சியான சப்பர பவனி வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, அன்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
