ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பள்ளி பேருந்து நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
ரமேஷ் மற்றும் மணிகண்டன் ஆகிய 2 பேர்
அத்தாணி அருகே ஓடைமேடு பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது
எதிரே வந்த தனியார் பள்ளி பேருந்து எதிர்பாரத விதாமாக இருசக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதியது. நிலைதடுமாரிய இருவரும் பேருந்தின் அடியில் உள்ள சக்கரத்தில் சிக்கி சிறிது தூரம் பேருந்தால் இழுத்துச் செல்லப்பட்டு உடல் நசுங்கி சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக ஆப்பக்கூடல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.