கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலி - அரசுப் பள்ளிகளில் பயோ மெட்ரிக் வைப்பதில் விலக்கு

தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் இன்று முதல் வரும் 31 ஆம் தேதி வரை பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவேடு செய்ய வேண்டாம் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலி - அரசுப் பள்ளிகளில் பயோ மெட்ரிக் வைப்பதில் விலக்கு
Published on
தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள், இன்று முதல் வரும் 31 ஆம் தேதி வரை பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவேடு செய்ய வேண்டாம் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அனுப்பிய சுற்றறிக்கையில் அரசுப் பள்ளி ஊழியர்களும் ஆசிரியர்களும் வருகைப் பதிவேடு மூலம் வருகையினை பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆசிரியர்கள், மாணவர்கள் தங்கள் கைகளை அவ்வப்போது கழுவ வேண்டும் காய்ச்சல், சளி போன்ற அறிகுறி இருந்தால் மாணவர்கள் பள்ளிக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com