கூவம், அடையாறு உள்ளிட்ட நதிகள் பராமரிக்க தவறியதாகக் கூறி, கடந்த பிப்ரவரி மாதம் தமிழக அரசுக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உடனடியாக இந்த விவகாரம் குறித்து தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த, உச்ச நீதிமன்ற நீதிபதி ரோகின்டன் நரிமன் தலைமையிலான அமர்வு, தேசிய பசுமை தீர்ப்பாயம் தமிழக அரசை எச்சரித்ததே தவிர, அபராதம் எதுவும் விதிக்கப்படவில்லை என தெளிவுப்படுத்தினார். எனவே, தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதி உத்தரவிட்டார்.