சாத்தூர் சம்பவம்... வருத்தம் தெரிவித்த துரை வைகோ

x

சாத்தூர் சம்பவம்... வருத்தம் தெரிவித்த துரை வைகோ

பத்திரிக்கை மற்றும் ஊடகங்களை என்றும் மதிக்கும் இயக்கம் ம.தி.மு.க என்றும், ‌சாத்தூரில் நடந்தவை வருந்தத்தக்கது எனவும், மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், சாத்தூரில் நடந்த கூட்டத்தில்

வைகோ பேசியபோது மின்சாரம் தடைபட்டதால் மண்டபத்துக்கு உள்ளே இருந்த தொண்டர்கள் சிலர் எழுந்து வெளியே சென்றதாகத் தெரிவித்துள்ளார்.

மின்சாரம் தடைப்பட்டதும், சற்று நேரம் வெளியே சென்றபோது படம் எடுக்கிறீர்களே, வெளியே ஆயிரக்கணக்கான தொண்டர்கள் நிகழ்ச்சியை கேட்டுக் கொண்டிருக்கிறார்களே, அங்கே போய் படம் எடுப்பீர்களா? "என்று வைகோ கேட்டதாகவும் துரை வைகோ குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து ஒளிப்பதிவு செய்ததால் ஊடகவியலாளர்கள் வெளியே செல்லலாம் என்று வைகோ அறிவுறுத்தியபோது சில தொண்டர்கள் ஆத்திரமடைந்ததாகவும், அதன் பின்னர் நடந்தவை விரும்பத்தகாதது என்றும் துரை வைகோ தெரிவித்துள்ளார். சாத்தூரில் நடந்த நிகழ்வுக்கு, தனிப்பட்ட முறையிலும், கட்சி சார்பிலும் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் துரை வைகோ கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்