Sathyamangalam | Weavers | "எங்களுக்கும் ரூ.2000 வேணும்.." - முதல்வருக்கு எழுந்த கோரிக்கை

"எங்களுக்கும் ரூ.2000 வேணும்.." - முதல்வருக்கு எழுந்த கோரிக்கை

கைத்தறி நெசவாளர் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் 2000 ரூபாய் சிறப்பு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்று சத்தியமங்கலம் பகுதி நெசவாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் ஓய்வு பெற்ற கைத்தறி நெசவாளர்களுக்கு மாதம் 1200 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. ஆனால் முதியோர், மாற்றுத்திறனாளி மற்றும் விதவை ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு வழங்கப்பட்ட 2000 ரூபாய் சிறப்பு ஊக்கத்தொகை நெசவாளர்களுக்கு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் தங்களுக்கும் அதேபோல் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்று நெசவாளர்கள் முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com