ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புனித அருளானந்தர் ஆலய தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. இதைத் தொடர்ந்து சிறப்பு திருப்பலி நடைபெற்றது. உலக சமாதானம் வேண்டி கிறிஸ்துவர்கள் குழந்தை ஏசு சிலை முன் மெழுகுவர்த்தி வைத்து பிரார்த்தனை செய்தனர். இதனைத் தொடர்ந்து புனித அருளானந்தர் தேர் ஊர்வலமாக சென்று, மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் குடும்பத்துடன் கையில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி கலந்து கொண்டனர்.