சத்தியமங்கலம் : குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

சத்தியமங்கலம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் செய்ததால் ஒரு மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சத்தியமங்கலம் : குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
Published on

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே, வரப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கொண்டையம்பாளையம் கிராமத்தில் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக அந்த கிராமத்திற்கு குடிநீர் விநியோகம் செய்யாததால் பொதுமக்கள் குடிநீர் தேடி விவசாய தோட்டங்களுக்கு அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என, புஞ்சைபுளியம்பட்டி - நம்பியூர் சாலையில் காலி குடங்களுடன் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது. அதன் காரணமாக அங்கு சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com