சத்தியமங்கலம் அரசு பள்ளி மாணவர்கள் திடீர் சாலை மறியல் - பள்ளி நேரத்திற்கு பேருந்து விட வலியுறுத்தல்

பள்ளி நேரத்திற்கு பேருந்து விட வலியுறுத்தி சத்தியமங்கலம் அருகே அரசுப் பள்ளி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சத்தியமங்கலம் அரசு பள்ளி மாணவர்கள் திடீர் சாலை மறியல் - பள்ளி நேரத்திற்கு பேருந்து விட வலியுறுத்தல்
Published on

பள்ளி நேரத்திற்கு பேருந்து விட வலியுறுத்தி சத்தியமங்கலம் அருகே அரசுப் பள்ளி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். புதுப்பீர்கடவு என்ற இடத்தில் நிகழ்ந்த இந்த போராட்டத்தில், பொதுமக்களும் கலந்து கொண்டனர். இதனால் பவானிசாகர் - பண்ணாரி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com