ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில், காட்டாற்று வெள்ளத்தை கடந்து, அரசு பேருந்து மலை கிராமங்களுக்கு சென்று வருகிறது. கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட மலைகிராமங்களுக்கு, 5க்கும் மேற்பட்ட அரசு பேருந்து மற்றும் ஒரு தனியார் பேருந்து இயக்கப்படுகிறது. இந்நிலையில் இப்பகுதியில் பெய்த பலத்த மழையால் காட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், அதிக அளவு மழை நீர் செல்வதால், பேருந்துகள் அதில் நீந்தி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அச்சத்தில் உள்ள மக்கள், உடனடியாக பாலம் கட்டித்தர கோரிக்கை விடுத்துள்ளனர்.