மக்காச்சோளப் பயிரை சேதப்படுத்திய யானைகள் - அறுவடை சமயத்தில் யானைகள் அட்டகாசம்

சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மலைப்பகுதி அருகே மக்காச்சோள தோட்டத்துக்குள் புகுந்த யானைகள் மக்காச்சோளப் பயிரை சேதப்படுத்தி உள்ளது.
மக்காச்சோளப் பயிரை சேதப்படுத்திய யானைகள் - அறுவடை சமயத்தில் யானைகள் அட்டகாசம்
Published on

சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மலைப்பகுதி அருகே மக்காச்சோள தோட்டத்துக்குள் புகுந்த யானைகள் மக்காச்சோளப் பயிரை சேதப்படுத்தி உள்ளது. பாபு என்பவரது தோட்டத்துக்குள் புகுந்த யானைக் கூட்டம் அறுவடைக்கு தயாராக இருந்த மக்காச்சோளப் பயிரை தின்றும் மிதித்தும் சேதப்படுத்தின. இதனைத் தொடர்ந்து, அப்பகுதி விவசாயிகளும், வனத்துறையினரும் இணைந்து பட்டாசு வெடித்து யானைகளை விரட்டியடித்தனர். இதனிடையே, தாளவாடி மலைப்பகுதியில் உள்ள தோட்டங்களில், யானைகள் அடிக்கடி நுழைவதால், விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com