குட்டையில் தவறி விழுந்து 4 வயது சிறுவன் பலி

சத்தியமங்கலம் அருகே விவசாய தோட்ட பண்ணை குட்டையில் தவறி விழுந்த 4 வயது சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குட்டையில் தவறி விழுந்து 4 வயது சிறுவன் பலி
Published on
சத்தியமங்கலம் அருகே திகினாரை கிராமத்தை சேர்ந்தவர் செல்வகுமார். விவசாயியான இவருக்கு 4 வயதில் ஹர்ஷித் என்ற மகன் இருந்தார். இவர் தன்னுடைய தோட்டத்தில் தண்ணீரை சேமித்து வைப்பதற்காக பண்ணை குட்டை ஒன்றை கட்டியுள்ளார். அந்த குட்டையில் தண்ணீர் நிரம்பி இருந்த நிலையில் சிறுவன் குட்டையின் அருகே விளையாடிக் கொண்டு இருந்துள்ளார். திடீரென குட்டையின் உள்ளே விழுந்த சிறுவன் மூச்சு திணறி இறந்ததாக கூறப்படுகிறது. சிறுவனை காணாமல் தேடிய பெற்றோர், அவன் குட்டையில் சடலமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com