சதுரங்க வேட்டை படப்பாணியில் மோசடி : பணம் கேட்டவரை கத்தியால் குத்திக் கொலை

சதுரங்க வேட்டை திரைப்பட பாணியில், ரைஸ் புள்ளிங் மற்றும் நாகரத்தினக் கல் வாங்கித் தருவதாக ஏமாற்றிய 3 லட்சம் ரூபாயை திருப்பிக் கேட்டவர் கொல்லப்பட்டார்.
சதுரங்க வேட்டை படப்பாணியில் மோசடி : பணம் கேட்டவரை கத்தியால் குத்திக் கொலை
Published on
சதுரங்க வேட்டை திரைப்பட பாணியில், ரைஸ் புள்ளிங் மற்றும் நாகரத்தினக் கல் வாங்கித் தருவதாக ஏமாற்றிய 3 லட்சம் ரூபாயை திருப்பிக் கேட்டவர் கொல்லப்பட்டார். திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அடுத்த அஞ்சுக்குழியில் டீக்கடை நடத்திவரும் சந்தாகிருஷ்ணன், நாகரத்தினக் கல் மற்றும் ரைஸ் புள்ளிங் கேட்டு, மணக்காட்டூர் முருகனிடம் 3 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். ஆனால், நீண்ட நாட்களாக ஏமாற்றி வந்த முருகன், அவரின் நண்பருடைய தோட்டத்தில் பதுங்கியிருந்தது தெரியவந்தது. அங்கு மகன் மற்றும் அவரது நண்பருடன் சென்ற சந்தானகிருஷ்ணன், முருகனைப் பிடித்து பணத்தைக் கேட்டுள்ளார். ஆனால், பணம் தர மறுத்த ரைஸ் புள்ளிங் முருகன், சிவக்குமாரை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில், சிவக்குமார் உயிரிழந்தார். சினிமா பாணி மோசடி குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com