Sathiyamangalam | "பணத்தை கொடுத்தால் வட்டி..." - சொன்னதும் பல கோடிகளை கொட்டிய மக்களுக்கு பேரதிர்ச்சி

x

"பணத்தை கொடுத்தால் வட்டி..." - சொன்னதும் பல கோடிகளை கொட்டிய மக்களுக்கு பேரதிர்ச்சி

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் செயல்பட்டு வரும் தனியார் நிதி நிறுவனமொன்று, வட்டி தராமல் ஏமாற்றியதால், முதலீட்டாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல இடங்களில் கிளைகள் இருக்கும் நிலையில், அப்பகுதியினர் பல கோடி முதலீடு செய்தனர்.இந்த நிலையில், முதலீட்டாளர்களுக்கு வட்டிபணத்தை திருப்பிச் செலுத்தாமல் நிறுவன ஊழியர்கள் தலைமறைவாகியுள்ளனர். ஆத்திரம் அடைந்த முதலீட்டாளர்கள் பணத்தை திருப்பி கேட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வருகை தந்த போலீசார், இது குறித்து பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்கும்படி அறிவுறுத்தி கூட்டத்தை கலைத்தனர்


Next Story

மேலும் செய்திகள்