சிவகங்கையில், சாத்தான்குளம் சம்பவத்தை கண்டித்து கடையடைப்பு

சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோர் காவல் துறையினரால் தாக்கபட்டு உயிரிழந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவகங்கையில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
சிவகங்கையில், சாத்தான்குளம் சம்பவத்தை கண்டித்து கடையடைப்பு
Published on

ஊரடங்கை மீறி கடையை திறந்ததற்காக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை, மகன் போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதனை கண்டித்து சிவகங்கையில் இன்று ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. சிவகங்கையில் பிரதான வீதிகளான அரண்மனை வாசல், நேரு பஜார், காந்தி வீதி, மஜித்ரோடு, மதுரைமுக்கு உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இப்பகுதிகளில் இயங்கி வந்த பலசரக்கு கடைகள், மொத்த வியாபார கடைகள் என அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டதால் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன.

X

Thanthi TV
www.thanthitv.com