சாத்தான்குளம் சம்பவத்தை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

சாத்தான்குளம் இரட்டை கொலையை கண்டித்தும் தனி அமைப்பை உருவாக்கி விசாரணை நடத்த வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்ற வாயிலில் 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சாத்தான்குளம் சம்பவத்தை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
Published on

சாத்தான்குளம் இரட்டை கொலையை கண்டித்தும், தனி அமைப்பை உருவாக்கி விசாரணை நடத்த வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்ற வாயிலில் 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்க மாநில செயலாளர் பாரதி மற்றும், மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் சென்னை மாவட்ட செயலாளர் ஜிம்ராஜ் மில்டன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பிரண்ட்ஸ் ஆப் போலீசை தடை செய்ய வேண்டும்,தவறான மருத்துவ அறிக்கை அளித்த மருத்துவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

X

Thanthi TV
www.thanthitv.com