

காவல்துறையினர் தாக்குதலால் உயிர் இழந்த வியாபாரிகளின் இறப்பு குறித்து பொய்யான தகவல் அளிக்கும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரை உடனடியாக பணியிடை மாற்றம் செய்ய வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எச் வசந்தகுமார் வலியுறுத்தியுள்ளார். நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,இதனை கூறினார். கொரோனா தடுப்பு நடவடிக்கையில், தமிழக அரசின் பணி திருப்திகரமாக இல்லை என்றும் தெரிவித்தார்.