சாத்தான்குளம் காவல்நிலையத்தில் - மாவட்ட நீதிபதி பாரதிதாசன் நேரில் விசாரணை

தந்தை-மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, சாத்தான்குளம் காவல்நிலையத்தில் மாவட்ட நீதிபதி விசாரணை மேற்கொண்டார்.

கோவில்பட்டி கிளைச் சிறையில், சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் உயிரிழந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இதையடுத்து, இரண்டு நீதிபதிகள் நேரில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நிலையில், தூத்துக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஹேமா கிளைச் சிறையில் விசாரணை மேற்கொண்டார். நேற்றிரவு எட்டரை மணிவரை விசாரணை மேற்கொண்டு திரும்பிய நிலையில், அதன்பின்னர் கோவில்பட்டி நீதிபதி பாரதிதாசன் தலைமையில் தட்டச்சு இயந்திரங்களுடன் பணியாளர்களும் கிளை சிறைக்குள் விசாரணைக்காக சென்றனர். விடிய விடிய விசாரணை நடைபெற்ற நிலையில், இன்று நண்பகல், சாத்தான்குளம் காவல்நிலையத்தில் மாவட்ட நீதிபதி பாரதிதாசன் விசாரணை மேற்கொண்டார்...

X

Thanthi TV
www.thanthitv.com