

சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கில், தவறான மருத்துவ சான்றிதழ் வழங்கியது கிரிமினல் குற்றம் இல்லை என்பதால் பெண் மருத்துவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும் என சிபிசிஐடி ஐ.ஜி. சங்கர் தெரிவித்துள்ளார். மேலும், இரண்டாவது முறையாக ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உறவினர்களிடம் விசாரணை நடத்த உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.