சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு - நவ.11 முதல் விசாரணை

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு விசாரணை நவம்பர் 11ம் தேதி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் துவங்குகிறது என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சி.பி.ஐ. தகவல் தெரிவித்துள்ளது.
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு - நவ.11 முதல் விசாரணை
Published on

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு

விசாரணை நவம்பர் 11ம் தேதி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் துவங்குகிறது என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சி.பி.ஐ. தகவல் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது, காவல் நிலையத்தில் அளிக்கப்படும் அனைத்து புகார்களுக்கும் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறதா? என்றும், அப்படி இருந்தால் எப்.ஐ.ஆர். பதிவு செய்ய கோரி பலர் ஏன் நீதிமன்றம் வருகின்றனர் என்றும் மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி இளந்திரையன் கேள்வி எழுப்பினார். இதனை தொடர்ந்து, முருகன், ரகு கணேஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

X

Thanthi TV
www.thanthitv.com