காவல் நிலைய சிசிடிவி காட்சி- புதிய தகவல் - கணினி ஆப்ரேட்டர் தாமஸ் என்பவரிடம் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை

சாத்தான்குளம் தந்தை - மகன் உயிரிழந்த சம்பவத்தில் விசாரணைக்கு முக்கிய ஆவணமாக கருதப்படும் காவல் நிலைய சிசிடிவி காட்சிகள் குறித்து மாஜிஸ்திரேட் மற்றும் சிபிசிஐடி போலீசார் விசாரணையில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
காவல் நிலைய சிசிடிவி காட்சி- புதிய தகவல் - கணினி ஆப்ரேட்டர் தாமஸ் என்பவரிடம் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை
Published on

சாத்தான்குளம் காவல்நிலையத்தில், சம்பவத்தன்று பணியில் இருந்த, சி.சி.டி.என்.எஸ் பிரிவு கணினி ஆப்ரேட்டர் தாமஸ் என்பவரிம் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை மேற்கொண்டார்.அப்போது, முக்கியமான காட்சிகள் ஏதாவது தேவை என அதிகாரிகளின் உத்தரவிட்டால் மட்டும் சிசிடிவி பதிவை திறந்து பார்க்க முடியும் என அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். அதிகாரிகள் உத்தரவு இல்லாமல் அதனை மாற்றி அமைக்கவோ, நீக்கவோ தங்களால் இயலாது எனவும் தெரிவித்துள்ளார்.

சம்பவம் நடைபெற்ற அன்று பணியில் இருந்தபோது, யாரையோ போலீசார் அடிப்பதாகவும், தமக்கு எதுக்கு பிரச்சினை என வெளியேறி விட்டதாகவும் தாமஸ் கூறியுள்ளார்.இதனிடையே, சாத்தான்குளம் காவல்நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகள் அளிக்கப்பட்டதா? அல்லது காட்சிகள் பதிய இடமில்லையா? என்பது குறித்து விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், இந்த சிசிடிவி காட்சிகளை மீண்டும் எடுக்கும் பணியில் சிபிசிஐடி போலீசாரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com