சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு அக். 4 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில், பென்னிக்ஸின் நண்பர் சாட்சியம் அளித்த நிலையில், அடுத்த கட்ட விசாரணை அக்டோபர் 4ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு அக். 4 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
Published on

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் கடந்த கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி விசாரணையின் போது காவல்துறையினர் தாக்கியதில் உயிரிழந்தனர். இந்த வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 9பேரின் மீது சிபிஐ தரப்பில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்த‌து. இந்த வழக்கு விசாரணையானது மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி பத்மநாபன் முன்பாக விசாரணைக்கு வந்த நிலையில், கைது செய்யப்பட்ட 9 பேரும் நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர். முன்னதாக உயிரிழந்த பென்னிக்ஸ்சின் நண்பர் ராஜாராமிடம் சாட்சியம் விசாரணை நடைபெற்றது. சம்பவத்தன்று காவல்நிலையத்திலும், மருத்துவமனையிலும் உடனிருந்த போது நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து அவர் சாட்சியம் அளித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் அக்டோபர் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com