

மதுரையில் நடைபெற்று வரும் சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் சிறப்பு சார்பு ஆய்வாளரிடம் குறுக்கு விசாரணை நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை , மகனான ஜெயராஜ் - பென்னிக்கிஸ் ஆகிய இருவரும் காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தனர்.
இது தொடர்பான வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டு சிபிஐ தரப்பில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது 9 பேரும் நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரிந்த ரவிச்சந்திரனிடம் , ஆய்வாளர் ஸ்ரீதர் நேரடியாகவும், குற்றஞ்சாட்டப்பட்ட 3 காவலர்களின் தரப்பு வழக்கறிஞர்களும் குறுக்கு விசாரணை செய்தனர். இதையடுத்து வழக்கு விசாரணையை ஜனவரி 7ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.