சாத்தான்குளத்தில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்..அரை மணி நேரத்தில் தட்டி தூக்கிய போலீஸ்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே இசக்கியம்மாள் என்பவரின் வீட்டிற்கு வந்த மர்மநபர் ஒருவர் அந்த பெண்ணை ஏமாற்றி செல்போனை பறித்துச் சென்றுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் செல்போனை பறித்துச் சென்ற கனகராஜ் என்பவரை அரை மணி நேரத்தில் கைது செய்தனர்.
