சசிகலா உடல்நிலை சீராக உள்ளது
சசிகலா உடல் நிலை சீராக உள்ளதாக விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது
சசிகலா உடல் நிலை சீராக உள்ளதாக விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சசிகலா செயற்கை சுவாசம் இன்றி சுவாசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சசிகலா உடல்நிலை சீராக உள்ளது என்றும் சர்க்கரை அளவு கட்டுக்குள் உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சசிகலா உதவியுடன் நடந்து செல்கிறார் என்றும் அவருடைய உடல் நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் விக்டோரியா மருத்துவமனை தெரிவித்துள்ளது.
