சூப்பர் சரவணா ஸ்டோர் புதிய நகை கடை திறப்பு
சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் தனது ஐந்தாவது நகை கடையை சென்னை, புரசைவாக்கத்தில் துவங்கியுள்ளது.
30 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் தொடங்கப்பட்டுள்ள அந்த கிளையில், தங்கம், வைரம், வெள்ளி ஆபரணங்கள் மற்றும் பட்டு சேலைகள் வரிசைப் படுத்தப் பட்டுள்ளது. திறப்பு விழாவை முன்னிட்டு சவரன் ஒன்றிற்கு ஆயிரத்து 500 ரூபாய் தள்ளுபடி விலை வழங்கப்படுகிறது. இந்த சலுகை வரும் ஞாயிற்றுக்கிழமை வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
