சொந்த ஊரில் ராஜகோபால் உடல் இன்று அடக்கம்...

சரவணபவன் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபாலின் உடலுக்கு, பொது மக்கள் மற்றும் பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
சொந்த ஊரில் ராஜகோபால் உடல் இன்று அடக்கம்...
Published on
சரவணபவன் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபாலின் உடலுக்கு, பொது மக்கள் மற்றும் பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜகோபால், மருத்துவமனையில் உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடல், அவரது இல்லத்தில் ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேரில் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் கோபால், திரைப்பட இயக்குனர் ஹரி, வணிகர் சங்க தலைவர் வெள்ளையன், உள்ளிட்டோர் அவரின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், அவரது உடல் சொந்த ஊரான திருச்செந்தூருக்கு அருகில் உள்ள புன்னைநகருக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
X

Thanthi TV
www.thanthitv.com