

கொலை வழக்கில் கைதாகி உடல்நலக்குறைவு காரணமாக ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபாலின் உடல் நலம் மோசமாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், அவரது இளைய மகன் சரவணன், மருமகள் ஆகியோர் மருத்துவமனைக்கு வந்து பார்த்தனர். ராஜகோபாலுக்கு இதய துடிப்பு குறைந்து உள்ளதாகவும், மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் அவர் உள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.