இன்று இரவு திருச்செந்தூருக்கு கொண்டு செல்லப்படுகிறது ராஜகோபால் உடல்

சரவணபவன் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபாலின் உடலுக்கு பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், திரைப்பட இயக்குனர் ஹரி உள்ளிட்டோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
இன்று இரவு திருச்செந்தூருக்கு கொண்டு செல்லப்படுகிறது ராஜகோபால் உடல்
Published on
ஜீவஜோதி கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சரவண பவன் ஹோட்டல் ராஜகோபாலுக்கு தூக்குதண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று காலை 10 மணியளவில் மருத்துவமனையில் உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடல் கேகே நகர் உள்ள அவருடைய இல்லத்தில் ஊழியர்கள் மற்றும் பொது மக்களுக்காக அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரது உடலுக்கு பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேரில் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் கோபால், திரைப்பட இயக்குனர் ஹரி, வணிகர் சங்க தலைவர் வெள்ளையன், உள்ளிட்டோர் அவரின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், இன்று இரவு சுமார் 8 மணி அளவில் அவரது உடல் இங்கிருந்து அவருடைய சொந்த ஊரான திருச்செந்தூருக்கு அருகில் உள்ள புன்னைநகருக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com