சரபங்கா நீரேற்று பாசன திட்டத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாளை அடிக்கல் நாட்ட உள்ளார். மேட்டூர் அணையின் உபரிநீரை, சரபங்கா வடிநிலத்தில் உள்ள100 வறண்ட ஏரிகளுக்கு நீரேற்று மூலம் அனுப்புவதே இந்த திட்டமாகும். பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும் பட்சத்தில், ஒரு போக சாகுபடி 3 போகமாக அதிகரிக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.